On 15-08-2024: 120/120 அடி/Feet
Inflow: 21,210 கன அடி/Cusecs
Outflow: 21,824 கன அடி/Cusecs
Available Water: 93.47/93.47 T.M.C
Water Level: Increasing
 
கட்ட துவங்கிய நாள்: 20.071925
கட்டி முடித்த நாள்: 21.08.1934
கட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி
கொள்ளளவு: 93.50 டி.எம்.சி
அதிகபட்ச உயரம்: 214 அடி
அதிகபட்ச அகலம்: 171 கீ.மீ 
சேமிப்பு உயரம்: 120 அடி
நீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்
1 Cusecs=28.317 Liters Per Second
1 T.M.C=28,316,846,592 Liters
மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!
Showing posts with label கிசான் திட்டம் விளக்கம் தமிழ். Show all posts
Showing posts with label கிசான் திட்டம் விளக்கம் தமிழ். Show all posts

Monday 12 December 2022

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் என்றால் என்ன?

Leave a Comment
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் என்றால் என்ன? பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா ஆனது, விவசாயி குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை பெறும் திட்டமாகும். அதாவது குடும்பத்தில் ஒருவரின் கணக்கில் 6000 ரூபாய் நேரடி வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் 2000 தொகையானது மூன்று தவணைகளில் வழங்குவதாகும். இந்த திட்டத்தின் விதிகளின்படி, இதில் கணவன் மனைவி மற்றும் இரண்டு மைனர் குழந்தைகள் உள்ள விவசாயி குடும்பங்கள் இதன்மூலம் பயனடைகின்றன.
 

PM KISAN விவசாய நிதிஉதவி திட்டம் குறித்து அடிக்கடி எழும் சந்தேகங்களும்.. பதில்களும்..

பிஎம் கிசான் திட்டத்தில் புதிய விதிமுறை வந்துள்ளது. விவசாயிகள் தங்களது கணக்கில் கேஒய்சி சரிபார்ப்பை முடித்தால்தான் பணம் கிடைக்கும். இல்லாவிட்டால் நிதியுதவி வருவதில் சிக்கல் ஏற்படலாம். இந்த கேஒய்சி அப்டேட்டை முடிக்க முதலில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். ஆனால் இப்போது மீண்டும் அந்த விதிமுறை கட்டாமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேஒய்சி அப்டேட் செய்ய மே 31ஆம் தேதிதான் கடைசி நாள். அதற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். அது ஈசியான காரியம்தான்.

https://pmkisan.gov.in/ என்ற வெப்சைட்டில் சென்று 'Farmers Corner’ என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் e-kyc என்ற ஆப்சன் இருக்கும். அதில் சென்றால் புதிய பக்கம் ஒன்று திறக்கும்.

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு ‘Get OTP ' பட்டனை கிளிக் செய்தால் ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ’Submit For Authentication' கிளிக் செய்ய வேண்டும்.

நாட்டில் நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதில் இணையும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு வருமானமாக நிதி ஆண்டுக்கு ரூ.6,000 நிதியானது தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மத்தியமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை பிப்ரவரி 01, 2019 அன்று பட்ஜெட்டின் போது அறிவித்தார். இதனை தொடர்ந்து விசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் பணத்தை நேராக செலுத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. PM-KISAN இல் சேரும் விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் தவணை நிதி தலா ரூ.2,000 வீதம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது.

10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலன் பெற்று வரும் இந்த திட்டத்தின் 10-வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார் பிரதமர். இதுவரை 10 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11-வது தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனனிடையே PM-KISAN திட்டம் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்களை இங்கே பார்க்கலாம்..

PM-KISAN தவணையை எவ்வாறு சரி பார்க்கலாம்?

* PM Kisan Nidhi-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான https://pmkisan.gov.in/ -க்கு செல்லவும்

 Farmers Section கார்னரில் உள்ள Beneficiary Status என்பதை க்ளிக் செய்யவும்

ஆதார் எண் / அக்கவுண்ட் எண்/மொபைல் எண்ணை தேர்ந்தெடுக்கவும்

* Get Data என்பதை க்ளிக் செய்யவும்

இப்போது ஸ்டேட்டஸை பார்க்கலாம்

PM கிசானின் அடுத்த தவணை எப்போது.?

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின்படிபிரதமர் கிசான் திட்டத்தின் 11-வது தவணை 31 மார்ச் 2022 அன்று விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டிற்கு நேரடியாக மாற்றப்படும்.

பிரதமர் கிசான் யோஜனாவில் ஒரு நிதியாண்டிற்கு எத்தனை தவணைகள்.?

PM Kisan Samman Nidhi Yojana-வில் ஒரு நிதியாண்டிற்கு தவணைகள் வீதம் தவணை ஒன்றுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது.

PM கிசான் அக்கவுண்ட் நம்பரை மாற்ற முடியுமா?

முடியும்விவரங்களைத் திருத்த, 'Edit' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

எடிட் செய்யப்பட வேண்டிய திருத்தப்பட வேண்டிய விவரங்கள் பிளாங்க் பாக்சில் (blank box) குறிப்பிடப்படும்

தேவையான மாற்றங்களை செய்து, 'Submit' ஆப்ஷனை கிளிக் செய்யவும்

PM கிசான்-ல் இணைய இப்போது ரிஜிஸ்டர் செய்யலாமா?

ஆம்நீங்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் PM Kisan Samman Nidhi Yojana-க்கு பதிவு செய்யலாம். தற்போதுவிண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கு CSC அல்லது வேறு எந்த சம்பந்தப்பட்ட துறைக்கும் செல்ல வேண்டியதில்லை.

PM கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கு எப்படி ரிஜிஸ்டர் செய்வது.?

முதலில் அதிகாரபூர்வ வெப்சைட்டான https://pmkisan.gov.in/ என்பதற்கு செல்லவும்

வெப்சைட்டின் வலது பக்கத்தில் உள்ள Farmers Corner என்பதற்கு சென்று New Registration-ஐ கிளிக் செய்யவும்

தேவையான விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்

PM கிசான் மூலம் பலன் பெறுவோர் பட்டியல் 2022-ஐ சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளம்.?

PM கிசான் பலன் பெறுவோர் பட்டியல் 2022-ஐ சரிபார்க்க https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பயன்படுத்த வேண்டும்.

11-வது தவணையின்ன் கீழ் விவசாயிகளுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

மார்ச் 31, 2022 அன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11-ஆம் தவணையாக ரூ.2,000 நேரடியாக வரவு வைக்கப்படும்.

11-வது தவணை என்னுடைய PM Kisan Yojana அக்கவுண்டிற்கு வரவில்லை என்றால்.?

PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது PM Kisan-ன் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

 

தொடர்பு கொள்ள உதவி எண்கள்

கடந்த 2019ம் ஆண்டு திட்டம் தொடங்கி முதல் தவணையில் 3.16 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர். பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தற்போது 10வது தவணையில் 10 கோடியைக் கடந்துள்ளது. இதை 14 கோடியாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பித்தும் நிதியுதவி கிடைக்காதவர்கள், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலவச அழைப்பு எண் 1800 1155 266, உதவி எண் 155261, 011-24300606, 011-23381092, 23382401, 0120-6025109 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.


Read More