மரம் வளர்ப்போம்..!! மழை பெறுவோம் ..!!!

Mettur Dam Water Level Live Status

On 22-09-2021: 73.370/120 அடி/Feet

Inflow: 11,124 கன அடி/Cusecs

Outflow: 7,800 கன அடி/Cusecs

Available Water: 35.665/93.47 T.M.C

Water Level: Increasing

Mettur Dam Water Level History - click here

Bhavanisagar Dam Water Level - click here

 

மேட்டூர் அணையின் முக்கிய விவரம்

கட்ட துவங்கிய நாள்: 20.07.1925
கட்டி முடித்த நாள்: 21.08.1934
கட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி
நீளம்: 5,300 அடி
கொள்ளளவு: 93.50 டி.எம்.சி
அதிகபட்ச உயரம்: 214 அடி
அதிகபட்ச அகலம்: 171 அடி
சேமிப்பு உயரம்: 120 அடி
நீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்

தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்

பிரதமர் பசல் பீமா திட்டம் - புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம் ( PMFBY)

1 Cusecs=28.317 Liters Per Second 1 T.M.C=28,316,846,592 Liters மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!! மரம் வெட்டுபவன் மனிதன்..! மரம் வளர்ப்பவன் "மா மனிதன்"..!!!

Friday, 3 September 2021

எந்தெந்தப் பட்டத்தில் எந்தெந்த பயிர்களை பயிரிடலாம் ................

Leave a Comment

விவசாயத்தை பொருத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்ததாகும். அதனால் குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.

ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்.

தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.

காற்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும்.

மார்கழி, தை பட்டம் 

கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.

தை, மாசி பட்டம் 

கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.

மாசி, பங்குனி பட்டம் 

வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.

பங்குனி, சித்திரை பட்டம் 

செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

சித்திரை, வைகாசி பட்டம் 

செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.

வைகாசி, ஆனி பட்டம் 

கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.

ஆனி, ஆடி பட்டம் 

மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.

ஆடி, ஆவணி பட்டம் 

முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.

ஆவணி, புரட்டாசி பட்டம் 

செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

புரட்டாசி, ஐப்பசி பட்டம் 

செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.

ஐப்பசி, கார்த்திகை பட்டம் 

செடி முருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.

கார்த்திகை, மார்கழி பட்டம் 

கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

குறிப்பு :-

எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.

நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.

If You Enjoyed This, Take 5 Seconds To Share It

0 comments:

Post a Comment