On 15-08-2024: 120/120 அடி/Feet
Inflow: 21,210 கன அடி/Cusecs
Outflow: 21,824 கன அடி/Cusecs
Available Water: 93.47/93.47 T.M.C
Water Level: Increasing
 
கட்ட துவங்கிய நாள்: 20.071925
கட்டி முடித்த நாள்: 21.08.1934
கட்டி முடிக்க ஆன செலவு : ரூ.4.80 கோடி
கொள்ளளவு: 93.50 டி.எம்.சி
அதிகபட்ச உயரம்: 214 அடி
அதிகபட்ச அகலம்: 171 கீ.மீ 
சேமிப்பு உயரம்: 120 அடி
நீர்ப்பிடிப்பு பரப்பளவு: 59.25 சதுர மைல்
1 Cusecs=28.317 Liters Per Second
1 T.M.C=28,316,846,592 Liters
மரம் வளர்ப்போம்...!!! மழை பெறுவோம்...!!!
Showing posts with label health insurance plans for family. Show all posts
Showing posts with label health insurance plans for family. Show all posts

Tuesday, 3 July 2018

Importance of Insurance | இன்சூரன்ஸ் திட்டத்தை பற்றிய ஒரு பார்வை

1 comment
In this Post we discuss about two importance of Insurance Schemes..

1. General Insurance

2. Health Insurance

How to Find Best Insurance Plans in Online
About Insurance Plans and Types

காப்பீடு/இன்சூரன்ஸ்:


மனிதர்களால் தவிர்க்க முடியாத சில இழப்புகளை இன்சூரன்ஸ் (காப்பீடு) மூலம் ஈடுசெய்ய முடியும். வாழ்க்கை என்பது நிலையற்ற ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய வாழ்க்கையை எந்த ஒரு கட்டத்திலும் நாம் செழிப்பான நிதிநிலையைக் கொண்டு ஈடுசெய்ய முடியும். மேலும் இக்காட்டான சூழ்நிலைகளில் வளமான நிதி நிலை, நம்முடைய பிரச்சனைகளைச் சரிபாதிகக் குறைந்து விடும் என்பது மறுக்க முடியாத ஒன்று. இத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் தனிநபரின் பொருளாதார நிலையை, மேம்படுத்திக்கொள்ளும் வகையில் வீடு, கார், பைக் போன்றவற்றை வாங்கவும் உதவியாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் இன்சூரன்ஸ் திட்டங்களின் மூலம் நாம் பெறும் வருமானத்திற்கான வரியையும் சேமிக்க முடியும்.

வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் நன்மை அளிக்கூடிய இன்சூரன்ஸ் அல்லது காப்பீட்டுத் திட்டங்களை இந்தியாவில் பல நிறுவனங்கள் அளிக்கிறது. அதை எப்படி, எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம் என்பதே நம்முடைய திறமை. 

கார் இன்சூரன்ஸ்:

ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது லைப் இன்சூரன்ஸ் போல் நாம் கார் இன்சூரன்ஸை தவிர்க்க முடியாது. இன்றைய நடைமுறையில் பல நிறுவனங்கள் ஆன்லைனிலேயே கார் இன்சூரன்ஸை வழங்குகிறது. இணையதளத்தில் சில கிளிக்குகளில் நாம் எளிமையாகக் கார் இன்சூரன்ஸ் அல்லாது காப்பீட்டை பெற்றுவிடலாம். மேலும் காருக்கான காப்பீட்டைப் பெறும் முன் இணையதளத்தில் பல நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களை ஒப்பிட்டபின் வாங்கவும், அதுமட்டும் அல்லாமல் பழைய நிறுவனத்துடனே மீண்டும் காப்பீட்டை புதுப்பிப்பது நமக்கு அதிகளவிலான நஷ்டத்தை அளிக்கும். புதிய காப்பீட்டை பெறும் முன் மிகவும் முக்கியமாக ஐடிவி மற்றும் விபத்து காப்பீட்டு ஆகியவை அளிக்கப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும் 

டேம் லைப் இன்சூரன்ஸ்:

மக்கள் பொதுவாக டேம் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தையும், எண்டோவ்மன்ட் பாலிஸி திட்டத்தையும் குழப்பிக்கொள்கிறார்கள். டேம் லைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீட்டுத் தொகையை நீங்கள் திரும்பப்பெற இயலாதும், ஆனால் லாப அளவு மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் இத்திட்டத்தை மக்கள் முதலீட்டுத் திட்டமாகப் பார்க்கக் கூடாது. 

மணி பேக் இன்சூரன்ஸ்:

டேம் லைப் இன்சூரன்ஸ் பாலிஸியை வைத்துள்ள ஒருவர் மணி பேக் இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் வங்கி டெப்பாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை விடவும் இத்திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காப்பீட்டுதாரர்க்கு லைப் கவரும் கிடைக்கும்.

குழந்தைகள் திட்டம்:

இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தைகளில் கல்விக்கான செலவுகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்கக் குழந்தைகள் திட்டம் மிகவும் சரியான தேர்வு. விண்ணப்பதாரர் உயிர் இழந்தாலும், குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் இத்தகைய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் வரும் வருமான அனைத்தும் வரிச் சட்டம் 80டி மற்றும் சட்டம் 10டி கீழ் தள்ளுபடி கிடைக்கிறது. 

தீவிர உடல்நலக் குறைவு:

வீட்டில் ஒருவரின் தீவிர உடல்நலக் குறைவு நிலை மொத்த குடும்பத்தின் நிதிநிலையை மோசமடையச் செய்கிறது. இத்தகைய நிலையைச் சமாளிக்கத் தீவிர உடல்நலக் குறைவு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சரியான முடிவு. இதனைச் சாதாரணச் சுகாதாரக் காப்பீட்டு திட்டத்துடனும் நீங்கள் பெறலாம். 

பயணக் காப்பீடு:

பலருக்கு இந்தப் பயணக் காப்பீட்டுத் தேவையற்றதாகத் தெரியலாம், ஆனால் வெளிநாடுகளுக்கு வருடம் ஒரு முறையாவது செல்லும் பயணிகளுக்கு இத்திட்டம் மிகவும் அத்தியாவசியமாகும். இத்திட்டத்தில் பாஸ்போர்ட் தொலைந்துபோவது, மருத்து அவசரம், உடைமைகள் காணமல் போவது போன்ற சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

சுகாதாரக் காப்பீடு:

இன்றைய வாழ்க்கை முறையில் மருத்துவச் செலவுகள் வான் அளவு உயர்ந்துள்ளது. இதனை ஈடுசெய்யக் குடும்பத்தில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமாக உள்ளது. இத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வரிச் சட்டம் 80டி வரிச் சலுகை பெறலாம். மேலும் மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய் வரையும், மற்றவர்களுக்கு 15,000 வரையும் கிளைம் செய்துகொள்ளலாம். 

எண்டோவ்மென்ட் பாலிஸி:

இது சாதாரண முதலீட்டுத் திட்டத்தைப் போலவே செயல்படுபவை, ஆயினும் இத்திட்டத்தில் லைப் இன்சூரன்ஸ் சேவையும் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை, முதலீட்டுப் பலனுடன் முதிர்வு காலத்திற்குப் பிறகு கிடைக்கும். 

இரு சக்கர வாகன காப்பீடு:

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக இரு சக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டயாமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது வாகனத்திற்குச் சேதாரம் ஆனாலோ, காணாமல் போனாலோ, விபத்து ஏற்பட்டாலோ இழப்பை இத்திட்டம் ஈடுசெய்யும். 

பென்ஷன் பிளான்/ ஒய்வுதிய திட்டம்:

பணியில் இருந்து ஒய்வு பெற்றபின் மீதமுள்ள வாழ்க்கையைச் சிற்பபாகவும், நிதி நெருக்கடியில் சிக்கமல் நிம்மதியாக வாழ்வு இந்தப் பென்ஷன் பிளான் உதவும். இத்திட்டத்தைச் சிறிய முதலீட்டுத் தொகை கொண்டும் துவங்கலாம், ஆனால் இத்தொகை உங்கள் ஒய்வுக்காலச் செலவுகளைச் சரி செய்யுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். மேலும் வருடத்திற்கு 1.5 லட்ச ரூபாய் அளவிற்கு முதலீட செய்யப்படம் இத்திட்டம் 80சிசிசி சட்டத்தின் கீழ் வரிச் சலுகை பெறுகிறது. 

தனிநபர் விபத்துக் காப்பீடு:

விபத்துகளில் உயிர் இழப்பு அல்லது நிரந்தர உனம் போன்றவற்றை ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் இத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

  • Thanks for reading this post..if you have doubts comment below
  • Anybody knows about full details of insurance schems and policies... pls give details in comment box.. it may useful to One.

Useful Links:

Mettur Dam Water Level Today

Mettur Dam Water Level History

Tourism in Mettur Dam

About Mettur

About Mettur Dam

Mettur Dam History

About Diabetes and Treatments

List of Important Government Websites

How to Increase Bike Mileage

Importance of Insurance

Major Reserviors in Tamilnadu

Tamil units of Measurements

Methods of Rain Water Harvesting

Mettur Park Timings

Arulmigu Padrakali Amman Temple Mecheri

Tourist Places in Mettur

About Dengue Fever

Contact Us

 

Read More